Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 06 மே (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களான மகேஸ்வர தயாள் (வயது 19) மற்றும் அருள் முத்துக்குமரன்
(வயது 20) ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் முசிறி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறியும் பணியில் முசிறி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இளம் வயதில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் இதுபோன்ற விபத்துகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b