ஸ்ரீதேவி வாங்கிய சொத்து வழக்கு-சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
சென்னை, 06 மே (ஹி.ச.) மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 1988ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்த 2.7 ஏக்கர் நிலத்தை ஸ்ரீதேவி வாங்கியிருந்
Sri


சென்னை, 06 மே (ஹி.ச.)

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

1988ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்த 2.7 ஏக்கர் நிலத்தை ஸ்ரீதேவி வாங்கியிருந்தார். இந்த நிலத்தில் பங்கு கோரி, அந்த நிலத்தை விற்ற சம்பந்த முதலியாரின் வாரிசுகள் எனக் கூறிய சிலர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நிராகரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் சென்னை உயர்நீதிமன்றம்த்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், வாரிசுகள் எனக் கூறியவர்களின் கோரிக்கையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ