மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை அணுகாத தவெக? - நிலைப்பாடு குறித்து தகவல்
சென்னை, 06 மே (ஹி.ச.) தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரமாக செயற்குழு மற்றும் மாநில குழு கூட்டங்களை கூட்டுகிறது. இந்த விவகாரம் குறித்து முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில், கட்சிய
சண்முகம்


சென்னை, 06 மே (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரமாக செயற்குழு மற்றும் மாநில குழு கூட்டங்களை கூட்டுகிறது.

இந்த விவகாரம் குறித்து முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில், கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் சூழலில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறவும், மாநில குழு கூட்டம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவை அவசர கூட்டங்களாக மாற்றப்பட்டு, வரும் 8ஆம் தேதி செயற்குழு மற்றும் மாநில குழு கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்று, இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P