ஹார்டிகல்ச்சர் துறைக்கு சிறப்பு கவனம் - வங்கிகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை
அமராவதி , 06 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் முன்னுரிமை துறைகளுக்கு கடன் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான நபார்டு கடன் திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். உண்டவல்லியில் உள்ள முகாம் அலுவலக
A


அமராவதி , 06 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் முன்னுரிமை துறைகளுக்கு கடன் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான நபார்டு கடன் திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

உண்டவல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5.11 லட்சம் கோடி மதிப்பிலான ‘ஸ்டேட் ஃபோகஸ் பேப்பர்’ அறிக்கையை வெளியிட்ட அவர்,

கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.4.24 லட்சம் கோடியாக இருந்த திட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கடன் திட்டம் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தில் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயிர் கடன்களுக்காக மட்டும் ரூ.1.66 லட்சம் கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) துறைக்கு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கால்நடை வளர்ப்பு துறைக்கு ரூ.34 ஆயிரத்து 972 கோடியும், மீன்வளத் துறைக்கு ரூ.21 ஆயிரத்து 98 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் ஹார்டிகல்ச்சர் துறையை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

தோட்டக்கலைப் பயிர்கள் வளர்ச்சிக்காக வங்கிகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தில் ஆண்டுதோறும் 450 லட்சம் மெட்ரிக் டன் ஹார்டிகல்ச்சர் உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ராயலசீமா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் மேம்பாட்டிற்காக ரூ.5 ஆயிரத்து 313 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நபார்டு சி.ஜி.எம். எம்.ஆர். கோபால், ஜி.எம். கே.வி.எஸ். பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் எஸ்.எல்.பி.சி., எஸ்.பி.ஐ., கனரா வங்கி, ஆந்திர கிராமிய வங்கி, ஆப்காப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA