Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 06 மே (ஹி.ச.)
பிகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான புதிய பாஜக அமைச்சரவை வரும் மே 7 ஆம் தேதி பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், முதல்முறையாக பாஜகவின் சாம்ராட் சௌதரி கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், புதன்கிழமை (ஏப்.6) மாலை 5 மணியளவில் பிகார் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாகவும்; பின்னர், மாலை 6 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நாளை நடைபெறும் பிகாரின் புதிய பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P