'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களுக்கும் வாக்காள பெருமக்களுக்கும் நன்றி - ஓ.பி.எஸ்
சென்னை, 06 மே (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார
O Panneerselvam


சென்னை, 06 மே (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து, எனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று, எனது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான இளைய தளபதி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தங்கத் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்; மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; சார்பு அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்த திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும்; நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும்; என்னை வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது கோடானு கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN