Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டங்கள் வரும் மே 8-ம் தேதிஅக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற உள்ளன.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டங்களில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலச் செயலாளர் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், மாநில அளவிலான உடனடி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தவெகவிற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய அரசியல் மாற்றங்கள், தொழிலாளர் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் போராட்ட வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 8-ம் தேதி காலை 10 மணிக்கு செயற்குழுவும், பிற்பகல் 2 மணிக்கு மாநிலக்குழுவும் கூடுகின்றன.
Hindusthan Samachar / vidya.b