Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 மே (ஹி.ச.)
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சென்சார் போர்டின் புதிய தலைவராக ஷஷி சேகர் வெம்பட்டியை நியமித்துள்ளது.
முன்னதாக 5 ஆண்டுகள் மத்திய அரசின் பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
2026 ஜனவரியில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதே நேரத்தில், சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பிரசூன் ஜோஷி, பிரசார் பாரதியின் புதிய CEO-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 ஜூன் மாதத்தில் பிரசார் பாரதி நிறுவனத்தின் CEO-வாக பொறுப்பேற்ற வெம்பட்டி, அரசு அலுவலராக இல்லாமல் அந்த பதவியை வகித்த முதல் நபர் என்ற சாதனையைப் பெற்றார். ஐஐடி மும்பை முன்னாள் மாணவரான அவர், தனது காலகட்டத்தில் ராஜ்யசபா டிவி நிறுவனத்தின் CEO-வாகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு, இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும், ‘நிதி டிஜிட்டல்’ என்ற டிஜிட்டல் செய்தி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டு BARC வாரியத்தில் தொழில்முறை இயக்குநராகவும் இணைந்தார்.
பிரசார் பாரதி CEO-வாக இருந்தபோது, ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் சேனல்களின் நவீனமயத்தில் முக்கிய பங்காற்றினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P