Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 மே (ஹி.ச.)
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஈரப்பதமான இடம் தேடி பாம்பு, அரணை போன்ற ஊர்வன உயிரிகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்டம் கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் சுமார் 5 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு(விஷமற்றது) பதுங்கி இருந்துள்ளது.
அதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பின்னர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் லாவகமாக அந்த பாம்பை பிடித்தனர்.
பாம்பை பிடித்தவர்கள் முதலில் அதனை நீரில் முழுமையான நனைய செய்தனர். பின்னர் பாம்பை எடுத்தும் செல்லும் துணி பையையும் நீரில் நனைத்து பின்னர் பாம்பை அதில் எடுத்துச் சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
வெயில் காலம் என்பதால் இதுபோன்று உயிரினங்கள் ஈரப்பதம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரக்கூடும் என்பதால் வீடு மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN