Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,
“வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
தோற்றாலும் தோல்வியில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில்,
மக்கள் தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராகவே வந்துள்ளது. அமைச்சரவையில் இருந்த பாதி அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர்.
எந்த தவறும் இல்லாமல் நாங்களும் அதன் தாக்கத்தை சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில், பாஜக தமிழகத்தை குறிவைத்து செயல்பட்டு வருகிறது.
இப்போது எங்கள்முன் நிற்கும் கேள்வி தெளிவாக உள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட திமுகவுடன் தொடர்வதா?
அல்லது பாஜகக்கு எதிராக போராடிய சக்திகளுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் பாஜக ஆட்சி வராமல் தடுக்க போராடவா?
என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவாகும் புதிய கூட்டணி அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam