பா.ஜ.க ,காங்கிரஸைப் பற்றி பேச அருகதை இல்லை- எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனம்
சென்னை, 06 மே (ஹி.ச.) காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை என ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்த கூட்டணி கட்சிகளை
Jothimani


Jjj


சென்னை, 06 மே (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்த கூட்டணி கட்சிகளை பாஜக முற்றிலும் பலவீனப்படுத்தி, அவர்களது இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அஸ்ஸாம் கண பரிசத், அகாலி தளம் (SAD), PDP, JD(S), JD(U), சிவசேனா, HVM, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் பாஜகவால் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாஜக தமிழ்நாட்டை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், அதனால் தான் மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை தாங்கள் ஏற்க வேண்டியுள்ளது என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகளை அழிக்கும் அரசியல் பழக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ