Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
கடந்த மார்ச் மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வந்தது.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13,820க்கும் சவரனுக்கு ரூ.1440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ.112,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும், சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P