பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் சென்னை வருகை
சென்னை, 06 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான 11
அர்லேகர்


சென்னை, 06 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெறாததால் தொங்கு சட்டப்பேரவை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 108 வேட்பாளர்களை நேரில் அழைத்து நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசமும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தவெக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் தமிழ்நாடு ஆளுநரை நாளை சந்திக்ககவும் விஜய் நேரம்

கேட்டுள்ளார்.சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை தவெக மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை வென்று உள்ள நிலையில் தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது.

மேலும் இன்னும் 7 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவைப்படுவதால் மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவை கூறி உள்ளது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் திருவனந்தபுரத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் கிண்டி ராஜ்பவர்களில் ஆளுநர் விஸ்வநாத் அருளேக்கரை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டு உள்ளார். அப்போது ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை ஆளுநரிடம் தவெக விஜய் வழங்க உள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam