கள்ளக்குறிச்சி, அரியலூர் எஸ்.பி.க்கள் மாற்றம் – உளவுத்துறைக்கு டி.ஜி.பி. உத்தரவு
தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இருவரும் அவசர நிர்வாக மற்றும் உளவுத்துறை பணிகளுக்காக மாற்றப்பட்டு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தமிழக டி.ஜி.பி. வெளியிட்ட உத்தரவின்பட
சந்தீப் ராய் ரத்தோர்


தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இருவரும் அவசர நிர்வாக மற்றும் உளவுத்துறை பணிகளுக்காக மாற்றப்பட்டு தமிழக டிஜிபி

சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக டி.ஜி.பி. வெளியிட்ட உத்தரவின்படி, இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை, முக்கிய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.க்கு கூடுதலாக அரியலூர் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டதால், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.க்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மாற்றங்கள் பொதுவாக முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு தேவைகள் அல்லது விசாரணை சார்ந்த பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உளவுத்துறையின் பங்கு அதிகரித்துள்ள நிலையில், அனுபவமிக்க அதிகாரிகளை அந்த பிரிவுக்கு மாற்றுவது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam