கும்பகோணம் காங்கிரஸ் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற திட்டம்
தஞ்சாவூர், 06 மே (ஹி.ச.) திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி வெளியேறி தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி மேயராக இருந்து வரும் கும்பகோணம் காங்கிரஸ் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்ட
காங்கிரஸ்


தஞ்சாவூர், 06 மே (ஹி.ச.)

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி வெளியேறி தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தின் ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி மேயராக இருந்து வரும் கும்பகோணம் காங்கிரஸ் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை நீக்கிவிட்டு துணை மேயர் சுப தமிழழகனை மேயராக்க திமுக கவுன்சிலர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கையெழுத்து சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அவசர கூட்டம் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இதனிடையே, தற்போதைய துணை மேயர் சுப தமிழழகனை புதிய மேயராக தேர்வு செய்ய திமுக கவுன்சிலர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், கும்பகோணம் மாநகராட்சியில் ஆட்சிப் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் அல்லது அரசியல் கட்சிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam