ஆண்டிப்பட்டி பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
தேனி, 06 மே (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து புகை வெளியேறுவதை கண்
ஆண்டிப்பட்டி பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்


தேனி, 06 மே (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடையில் இருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

எனினும், அதற்குள் கடையில் இருந்த மளிகை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாகின.

முதற்கட்ட விசாரணையில், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடை பூட்டப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வணிக வளாகங்களில் தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b