Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 மே (ஹி.ச.)
கடன் தள்ளுபடி செய்து தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி அமைப்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று கூறி சில மோசடி கும்பல்கள் மக்களை தவறாக நம்ப வைப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக போலியான சான்றிதழ்களை வழங்கி, சேவை கட்டணம் மற்றும் சட்டக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்து ஏமாற்றும் செயல்களும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடன் தள்ளுபடி செய்து தருவதாக கூறும் நபர்கள் அல்லது அங்கீகாரம் பெறாத அமைப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடன் தொடர்பான விவரங்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களையே அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போலியான வாக்குறுதிகளை நம்பி பணம் செலுத்துவதால் மக்கள் நிதி இழப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA