த.வெ.க உடன் ஆதரவு குறித்து கேள்வி -பதில் அளிக்க மறுத்த அன்புமணி ராமதாஸ்
சென்னை, 06 மே (ஹி.ச.) பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், சமீபத்திய அரசியல் சூ
அன்புமணி


சென்னை, 06 மே (ஹி.ச.)

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், சமீபத்திய அரசியல் சூழ்நிலை, தேர்தல் முடிவுகள், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், கூட்டணி தொடர்பான சாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் உருவாகி வரும் புதிய அரசியல் அமைப்புகள் மற்றும் கூட்டணிகள் குறித்து பாமக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்ட வாரியாக கட்சியின் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் நடவடிக்கைகள், அடிப்படை உறுப்பினர் சேர்க்கை, இளைஞர் மற்றும் மாணவர் அணிகளைச் செயல்படுத்துவது உள்ளிட்ட கட்சி வளர்ச்சி தொடர்பான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதில்,கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த அன்புமணி ராமதாஸ்,

காங்கிரஸ் கட்சி த.வெ.க.விற்கு ஆதரவளித்தது குறித்து பாமகவின் நிலைப்பாடு என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல்,

நன்றி… வணக்கம்…என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதன் மூலம், கூட்டணி அரசியல் குறித்து பாமக இன்னும் தனது இறுதி முடிவை வெளிப்படுத்தாத நிலையில் இருப்பது தெளிவாகியுள்ளது.

வரவிருக்கும் நாட்களில் பாமகவின் அரசியல் நிலைப்பாடு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam