தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை, 06 மே (ஹி.ச.) நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 56 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.
ரஜினி


சென்னை, 06 மே (ஹி.ச.)

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 56 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்ற ஸ்டாலின், தன்னை ஆதரித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் கூட்டணி கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அவர்களிடம் உற்சாகம் அளிக்கும் வகையில் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த், ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது,

வெற்றி பெறும் நேரங்களில் மட்டுமல்ல, சவாலான சூழல்களிலும் உங்களுடன் இருப்பேன் என்று ரஜினிகாந்த் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P