Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை.
இதனால், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைகக் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
இதனை அடுத்து தவெக தலைவர் விஜய், இன்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதனிடையே, அவர் நாளை முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில், பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவி யேற்பு விழா நடைபெறகிறது.
Hindusthan Samachar / vidya.b