ரேவந்த் ரெட்டி அரசு விவசாயிகளின் கண்ணீரில் அடித்துச் செல்லப்படும் - முன்னாள் அமைச்சர் சத்யவதி ராதோட் கடும் தாக்கு
ஹனுமகொண்டா, 06 மே (ஹி.ச.) ஹனுமகொண்டாவில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் இன்று நடைபெற்ற சங்க்ராம சபா’ கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்யவதி ராதோட் மற்றும் ஜனகாம் எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்
T


ஹனுமகொண்டா, 06 மே (ஹி.ச.)

ஹனுமகொண்டாவில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் இன்று நடைபெற்ற சங்க்ராம சபா’ கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்யவதி ராதோட் மற்றும் ஜனகாம் எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சத்யவதி ராதோட்,

கே.சி.ஆர். ஆட்சி காலம் விவசாயிகளுக்கு பொற்காலமாக இருந்தது.

விவசாயத்தை திருவிழாவாக மாற்றிய ஆட்சி அது. தற்போதைய ரேவந்த் ரெட்டி அரசு மக்கள் நல ஆட்சி நடத்தவில்லை.

விவசாயிகளை பாதிக்கும் வகையிலேயே செயல்படுகிறது.

விவசாயிகளின் கண்ணீரில் இந்த அரசு அடித்துச் செல்லப்படும்.

விவசாயிகள் மீண்டும் வளமாக வாழ வேண்டுமெனில் கே.சி.ஆர். ஆட்சி மீண்டும் வர வேண்டும்,என்றார்

இதனைத் தொடர்ந்து பேசிய ஜனகாம் தொகுதி எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி,

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று விமர்சித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தெலங்கானா போராட்டத்திற்கு உயிரூட்டிய மண் வரங்கல்.

பி.ஆர்.எஸ். கூட்டம் நடத்தப்படும் என்றாலே காங்கிரஸ் அரசு பதற்றமடைகிறது.

ஜகித்யாலில் கே.சி.ஆர். கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் ரேவந்த் ரெட்டியும் கூட்டம் நடத்தினார். ஆனால் அந்த கூட்டம் தோல்வியடைந்தது.

மேலும், கே.சி.ஆர். அரசு விவசாயிகளுக்காக ரூ.72 ஆயிரம் கோடி வழங்கியது. வரங்கல் மாவட்டத்தின் கடைசி நிலப்பரப்பிற்கும் பாசன நீர் சென்றடைந்தது.

வரங்கலை பசுமை மாவட்டமாக மாற்றியது கே.சி.ஆர். ஆட்சிதான் என்றும் பல்லா ராஜேஷ்வர் ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA