சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார் - தமிமுன் அன்சாரி
சென்னை, 06 மே (ஹி.ச) சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த
Ansari


சென்னை, 06 மே (ஹி.ச)

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

அதற்காக தாம் தற்போது வகித்து வரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், அப்படியெல்லாம் பேசக்கூடாது என எச்சரிக்கையுடன் அறிவுரை வழங்கியதாக தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

கூட்டணி ஒற்றுமை மற்றும் அரசியல் மரபுகளை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டாம் என்பதையே ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கருத்து, கூட்டணி அரசியலில் அரிதாகக் காணப்படும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.

மேலும், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான உறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நயங்கள் குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ