Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் விஜய் ஆட்சி அமைக்க இன்றும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜேஷ் குமார் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராகப் பொறுப்பேற்றார்.
2026 வரை திமுக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ராஜேஷ் குமார் செயல்பட்டார்.
தற்போது அவர் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ராஜஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P