Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 06 மே (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஹரிஹரன் என்பவர் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்களை ஆய்வு செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஹரிஹரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் சட்டம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதை இந்த தீர்ப்பு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளதாக சட்ட வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்த தீர்ப்பு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN