Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் இல்லாமல் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
இந்நிலையில் தவெக தரப்பில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் மூலம் ஆதரவளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், யார் ஆதரவு கோரி கடிதம் அளித்து இதுபோன்ற அரசியல் அழைப்பை முன்வைத்தாலும், அதுகுறித்து முடிவு எடுக்க கட்சியின் செயற்குழு கூட்டம் கூட்டப்படுவது வழக்கம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது கிடைத்துள்ள இந்த அழைப்பை பரிசீலிக்க அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P