தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பதாக தகவல்
தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.) தவெக தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்பது அரசிய
ராகுல் காந்தி - விஜய்


தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.)

தவெக தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு, வாகன நிறுத்த கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவ அவசர சேவைகள், தீயணைப்ப அணிகள் மற்றும் அவசர உதவி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam