த.வெ.க. ஆதரவு அளிப்போமா? வேண்டாமா? - நாளை அவசர ஆலோசனை நடத்தும் வி.சி.க
சென்னை, 06 மே (ஹி.ச.) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க இன்னும் 6 எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் 2 எம்.எல்ஏக்கள் உள்ளதால், அ
திருமாவளவன்


சென்னை, 06 மே (ஹி.ச.)

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க இன்னும் 6 எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் 2 எம்.எல்ஏக்கள் உள்ளதால், அவர்களின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் தவெகவும் ஆதரவு கோரி விசிகவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடல் பகுதியில் நாளை அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தை திருமாவளவன் கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில், விஜய்க்கு ஆதரவு வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனையும் முடிவும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P