விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- மீனவர் கைது
தூத்துக்குடி, 06 மே (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூர் அருகே அமளிநகர் பகுதியைச் சேர்ந்த பேஸ்கி பர்ணா
கைது


தூத்துக்குடி, 06 மே (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் அருகே அமளிநகர் பகுதியைச் சேர்ந்த பேஸ்கி பர்ணாந்தின் மகன் திலேத்குமார் (52), வேம்பார் பகுதியில் தனது நண்பருடன் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 27ஆம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் சர்ச்சுக்கு சென்றிருந்த நேரத்தில், நண்பரின் 16 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, திலேத்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திலேத்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam