Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 09 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் கேரளாவுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது,
மாவட்டத்திற்குள் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் விதிகளுக்குப் புறம்பாகக் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட இந்த லாரிகளை நிரந்தரமாக அரசுடமையாக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அனுமதியின்றி கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடத்தலில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b