Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 09 மே (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வழக்கமாக அதிகளவு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இன்றைய காலை நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 168 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாலுமுக்கில் 158 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 142 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 110 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மேலும், ஊத்து பகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவி, மணிமுத்தாறு அணை, காரையாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam