Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 09 மே (ஹி.ச.)
பீகார் பொதுப் பணித் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) நான்காம் கட்ட ஆசிரியர் பணி நியமன அறிவிப்பை வெளியிடக் கோரி, பாட்னாவில் பெருமளவிலான பணி நாடுவோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததன் விளைவாகவே தடியடிச் சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் பிபிஎஸ்சி(BPSC) நான்காம் கட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிடக் கோரி பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணி நாடுவோர் மீது காவல்துறை நடத்திய தடியடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சுமார் ஒரு நிமிட காணொளி ஒன்றை ராகுல் காந்தி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
அதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவலர்கள் தடியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவது பதிவாகியிருந்தது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
வேலைவாய்ப்புக்கான தங்கள் உரிமையைக் கோரி அமைதியான முறையில் போராடிய ஆசிரியர் பணி நாடுவோரை, பீகார் காவல்துறை மிகக் கொடூரமான முறையில் நடத்தியுள்ளனர்.
வேலையில்லாத இளைஞர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, தடியடியும் ஒடுக்குமுறையும் மட்டுமே பாஜக அரசுகளிடம் உள்ள ஒரே பதிலாகத் திகழ்கிறது.
வேலையின்மைதான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைவே மிகக் கடுமையாகப் பாதித்து வருகின்றது.
பட்டங்களையும் தகுதிகளையும் பெற்ற பிறகும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை.
தங்கள் உரிமைகளையும் வேலைவாய்ப்பையும் கோரி இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடும்போது, அவர்களுக்கு வேலை வழங்குவதற்குப் பதிலாக, அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அளவில் பாஜகவின் ஆதரவுடன் இயங்கும் அரசுகள், இளைஞர்களின் குறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒடுக்குமுறை மனப்பான்மையையே கடைப்பிடித்து வருகின்றது.
பாஜகவின் பொய் வாக்குறுதிகளால் நாட்டின் இளைஞர்கள் சோர்வடைந்துவிட்டனர். இனி அவர்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. வேலைவாய்ப்பு மற்றும் உரிமைகளுக்கான இளைஞர்களின் போராட்டத்தில், எந்தச் சூழலிலும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்குத் துணையாக நிற்கும். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b