சென்னையில் கனமழை எதிரொலி -வானில் வட்டமடித்த விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
சென்னை, 09 மே (ஹி.ச.) சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், ஆலந்தூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரம் முதலே கடும் மேகமூட்டம் நிலவிய நிலையில், தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. திடீர் கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர்
விமானம்


சென்னை, 09 மே (ஹி.ச.)

சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், ஆலந்தூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரம் முதலே கடும் மேகமூட்டம் நிலவிய நிலையில், தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

திடீர் கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின்னரே ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி வருகின்றன.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம், பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ விமானம், கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனமழை காரணமாக விமான சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam