சென்னையில் பலத்த மழை - கத்திரி வெயிலில் இருந்து மக்களுக்கு நிம்மதி
சென்னை, 09 மே (ஹி.ச.) கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, தி.நகர், சைதாப
மழை


சென்னை, 09 மே (ஹி.ச.)

கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருகின்றனர்.

கத்திரி வெயிலால் கடும் வெப்பத்தில் தவித்த மக்களுக்கு, தற்போதைய மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam