பாஜகவை விமர்சிக்க விஜய்க்கு பயம் ஏன்? – திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடும் தாக்கு
சென்னை, 09 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், திமுக தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்,புதிய அரசு அமைக்க தேவை
Admk head office


Jj


சென்னை, 09 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், திமுக தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்,புதிய அரசு அமைக்க தேவையான நடைமுறைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன் என்று கூட்டணி கட்சிகளையும் அழைத்து தெளிவாக கூறிவிட்டார். இந்நிலையில் இன்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரும் குதிரை பேர இதுவரை எதற்காக ஆளுநர் குறித்தோ, பாஜக குறித்தோ ஒரு வார்த்தையும் பேசவில்லை? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன்,பாசிச பாயசம் இனிப்பதாலா? எங்கள் தலைவர் தெளிவாக சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு? பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு? என்று திமுக தொழில்நுட்ப அணி காட்டமாக விமர்சித்துள்ளது.

தமிழக அரசியல் சூழலில் ஆட்சி அமைப்பைச் சுற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக தொழில்நுட்ப அணியின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ