Enter your Email Address to subscribe to our newsletters

ராம்பன், 09 மே (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அடிப்படை மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை இறுதி செய்துள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரை ராம்பன் மாவட்டம் வழியாக செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 44-ல் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக ராம்பன் கருதப்படுவதாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கமல் ஜி ஜாடூ தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜாடூ,
ராம்பன் மாவட்ட மருத்துவமனையில் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினோம்.
இந்த மாவட்டம் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதியாக இருப்பதாலும், ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு தயாராகி வருவதாலும், அவசர காலங்களுக்கு போதுமான இரத்த சேமிப்பு மிகவும் அவசியம்
யாத்திரை காலத்திற்கு முன்பாக இரத்த சேமிப்பை அதிகரிக்க, மாவட்டத்தில் உள்ள நான்கு மருத்துவ வட்டாரங்களிலும் இதேபோன்ற இரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.
பக்தர்களுக்கு உதவுவதற்காக நாஷ்ரி முதல் பனிஹால் வரையிலான அனைத்து லங்கர் தளங்களிலும், தங்கும் மையங்களிலும் மருத்துவ குழுக்கள் நிறுத்தப்படும்.
யாத்ரி நிவாஸ் சந்தர்கோட் மற்றும் பனிஹாலில் உள்ள லாம்பர் ஆகிய இடங்களில் அவசர பரிசோதனை வசதிகள், ஆக்ஸிஜன் ஆதரவு மற்றும் டிஃபிப்ரிலேட்டர்கள் கொண்ட சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
யாத்திரை பாதையில் 17 ஆம்புலன்ஸ்களை சுகாதாரத் துறை நிறுத்தியுள்ளது. கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆம்புலன்ஸ் யாத்திரை வாகன அணிவகுப்புடன் முழு பயணத்திலும் உடன் செல்லும்.
யாத்திரையின் போது அவசர தேவைகளை சமாளிக்க போதுமான இரத்தப் பொருட்கள் இருப்பு வைக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் ஜாடூ தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b