Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்ற பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் நலன், மாநில வளர்ச்சி, சமூக நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை முன்னிறுத்தி புதிய அரசு செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கூட்டணி அமைப்பு மற்றும் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த வாழ்த்து பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ