தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்.சுரேஷ்ராஜன்..!
சென்னை, 09 மே (ஹி.ச.) முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவருமான என்.சுரேஷ் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாம
2


சென்னை, 09 மே (ஹி.ச.)

முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவருமான என்.சுரேஷ் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

உயிராகவும்,உணர்வாகவும் மக்களை காத்து வழிநடத்திய அன்பு தளபதியார் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர முடியாத

சூழ்நிலையில்,அவர் எனக்கு அளித்த தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் பொறுப்பு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பினும், தளபதியார் அரியணையில் இல்லாத இடத்தில் அப்பதவியில் தொடர எனது உள்ளம் மறுக்கிறது.

இந்த சூழ்நிலையில் கழகத் தலைவர் எனும் தாரக மத்திர சொல்லுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்க விரும்புகிறேன்.

எனவே என்னுடைய தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்பதை இதன் வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J