Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மே (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. தொடர்ந்து தற்போது மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,150க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் அதே விலையே விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அதே விலைக்கே தங்கம் உள்ளது.
அதன் படி, ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ரூ.ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P