Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மே (ஹி.ச.)
முழுமையான பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் கூட, ஆளுநர் பதவியை பயன்படுத்தி பாஜக ஆட்சி அமைத்தது நாடு கண்ட உண்மை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கோவா, மணிப்பூர், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தீர்ப்பை மீறி அரசியல் கணக்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
ஆளுநர் பதவி என்பது பாஜக அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் அலுவலகம் அல்ல. அது அரசியலமைப்பை காக்கும் உயரிய பொறுப்பு,என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கவும் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும்,என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ