ஆளுநர் ஆட்சி என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை மக்களாட்சி தான் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் - வன்னியரசு
சென்னை, 09 மே (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தலைவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் நேற்று உயர்நிலை கூட்டம் கூட்டப்பட்டுள்ள
வன்னியரசு


சென்னை, 09 மே (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தலைவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் நேற்று உயர்நிலை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அவரின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்.

ஆளுநர் ஆட்சி என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை மக்களாட்சி தான் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆளுநரின் செயல்பாடுகள் எல்லாம் எதிராக இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த மாதிரியான ஆளுநர் ஆட்சியை நாங்கள் ஆதரிப்பதில்லை

துணை முதல்வர் பதவி அமைச்சர் பதவி உயர் பதவி போன்றவை வீசி காக்கிறது என்பது குறித்த கேள்விக்கு,

அது குறித்து எனக்கு தெரியவில்லை தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும், என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆளுநரின் சமீபத்திய செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாக எங்கள் கட்சி கருதுகிறது.

மாநில உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விமர்சித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam