Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 09 மே (ஹி.ச.)
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் பகுதியில் பள்ளி விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏரிசாலை, மூஞ்சிக்கல், கான்வென்ட் ரோடு, நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, கல்லறைமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றன.
கோடை சீசன் தொடங்கியுள்ளதால் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் நகரம் முழுவதும் நெரிசல் நீடித்து வருகிறது.
தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே இதுபோன்ற போக்குவரத்து நெரிசல்களை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam