Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (56). இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30), உள்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் மற்றவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
பிரசாந்துக்கு திருமணம் ஆகாததால் தாய், தந்தையருடன் தோட்டத்து வீட்டில் வசித்துக்கொண்டு வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணிக்குவீட்டுக்கு வந்த பிரசாந்த் தனது தாய் பெத்தமாளிடம் மது குடிப்பதற்குபணம் கேட்டு தகராறு செய்தார். தாய் பணம் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த பிரசாந்த், வீட்டிலிருந்த அருவாளை எடுத்து பெத்தமாவின் வலது புற கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பெத்தம்மா காரில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துதப்பி ஓடிய பிரசாந்தை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் ஏட்டுக்கள் மனோஜ் குமார், சேதுராமன், மணிகண்டன் ஆகியோர் ரோந்து சென்ற போது குலசேகரன்கோட்டை அனுமார் கோயில் முன்பாக நின்றிருந்த பிரசாந்த் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
உடனே அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தி ஆஜர் படுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN