கோபால கிருஷ்ண கோகலேவின் 160-வது பிறந்தநாள் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அஞ்சலி
புதுடெல்லி, 09 மே (ஹி.ச.) இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே 1866-ம் ஆண்டு மே 9-ந் தேதி பிறந்தார். சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியை நிறுவிய அவர் அரசியலமைப்பு வழிகளிலும் சட்டமன்ற நிறுவனங்கள் மூலமாகவும் சமூக சீர்தி
Mallikarjun Kharge Pays Tribute


புதுடெல்லி, 09 மே (ஹி.ச.)

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே 1866-ம் ஆண்டு மே 9-ந் தேதி பிறந்தார்.

சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியை நிறுவிய அவர் அரசியலமைப்பு வழிகளிலும் சட்டமன்ற நிறுவனங்கள் மூலமாகவும் சமூக சீர்திருத்தங்களையும் இந்திய சுயாட்சியையும் வலியுறுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.

மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் கோகலே பரவலாக அறியப்படுகிறார்.

காந்தியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்னாப்பிரிக்கா சென்ற கோகலே, இந்தியாவின் சமூக-அரசியல் நிலைமைகள் மற்றும் சாமானிய இந்தியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருக்கு வழிகாட்டினார்.

பின்னாளில் காந்தி தனது சுயசரிதையில் கோகலேவை தனது வழிகாட்டி என்று குறிப்பிட்டார். 1920-ம் ஆண்டுக்குள் காந்தி, இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னணித் தலைவராக உருவெடுத்தார்.

கோபால கிருஷ்ண கோகலேவின் 160-வது பிறந்தநாளையொட்டி, இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து கார்கே இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

தனது சுயசரிதையில், பாபு (மகாத்மா காந்தி) தனது வழிகாட்டியான கோபால கிருஷ்ண கோகலேவை, படிகம் போல் தூயவர், ஆட்டுக்குட்டி போல் சாதுவானவர், சிங்கம் போல் துணிச்சலானவர், வரம்பு மீறும் அளவுக்குப் பெருந்தன்மை கொண்டவர் மற்றும் அரசியல் களத்தில் மிகச் சிறந்த பரிபூரண மனிதர் என்று வர்ணித்துள்ளார்.

அவரது பிறந்தநாளான இன்று, இந்தியாவின் தேசிய இயக்கத்தின் முதன்மையான சிற்பிகளுள் ஒருவரும், புகழ்பெற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அவருக்கு எங்களது உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

அரசியலமைப்பு நெறிகள், பொதுச் சேவை மற்றும் அறிவார்ந்த தேசக் கட்டுமானம் குறித்த கோகலேவின் கொள்கைகள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.

என்று கார்கே தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b