மக்கள் தீர்ப்பை அதிகாரத்தால் ஒடுக்க முடியாது - மாணிக்கம் தாகூர்
விருதுநகர், 09 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும் (SPA), தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும் நீண்டகால கூட்டாளிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தற்போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக
மக்கள் தீர்ப்பை அதிகாரத்தால் ஒடுக்க முடியாது - மாணிக்கம் தாகூர்


விருதுநகர், 09 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும் (SPA), தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும் நீண்டகால கூட்டாளிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தற்போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு விஜய் தலைமையிலான தவெக கூட்டாளிகளை தேடும் நிலையில், ஐந்து இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, SPA-வில் இருந்து விலகி தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வுக்கு, தலா இரண்டு இடங்களில் வென்ற சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளும் தங்கள் ஆதரவை அளித்துள்ளன.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராவதை மக்கள் ஆணைக்கு எதிராக அரசியல் எதிரிகள் தடுக்க முயல்வதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திவாய்ந்தவர்கள் மீண்டும் தலையிட்டு திரு. விஜய் அவர்கள் முதலமைச்சராக வருவதைக் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எதிராக இன்னும் எத்தனை தடைகளை உருவாக்கப் போகிறார்கள்?

அதிகாரம் மக்களின் தீர்ப்பை தாமதப்படுத்தலாம்,ஆனால் அதை என்றும் அடக்க முடியாது.

மக்களின் உரிமைக்கும் நீதிக்கும் இந்தப் போராட்டம் தொடரும்.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b