Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்கண்ட், 09 மே (ஹி.ச.)
2025-26 நிதியாண்டில் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரி வசூலித்துள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி முதல் இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் ரூ.12,000 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார்-ஜார்கண்ட் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ்,
கடந்த நிதியாண்டில் இரு மாநிலங்களையும் சேர்த்து பார்க்கும்போது அதிக வரி செலுத்திய தனிநபர் எம்.எஸ். தோனி.
மொத்த வரி வசூலில் சுமார் 70 சதவீதம் 'டிடிஎஸ்' மூலம் கிடைத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் தோனி செலுத்திய துல்லியமான வரித்தொகை வெளியிடப்படவில்லை.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் சேர்த்து சுமார் 5.5 கோடி பேர் பான் கார்டுதாரர்கள் உள்ளனர் என்றும், 40 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் விளம்பர ஒப்பந்தங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் பல்வேறு வணிக நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து உயர்ந்த வருமானம் ஈட்டி வரும் தோனி, வரி செலுத்துதலிலும் முன்னணியில் இருப்பது கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam