பதவியேற்பு விழாவில் மூத்த பாஜக தொண்டரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் மோடி
மேற்கு வங்கம், 09 மே (ஹி.ச.) மேற்கு வங்கத்தில் நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூத்த பாஜக தொண்டர் மகன்லால் சர்காரை சந்தித்து கவுரவித்தார். 98 வயதான மகன்லால் சர்கார், மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஆரம்பகால முன்னோடி தொண்
மோடி


மேற்கு வங்கம், 09 மே (ஹி.ச.)

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூத்த பாஜக தொண்டர் மகன்லால் சர்காரை சந்தித்து கவுரவித்தார்.

98 வயதான மகன்லால் சர்கார், மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஆரம்பகால முன்னோடி தொண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பதவியேற்பு விழா மேடையில் அவரை சந்தித்த பிரதமர் மோடி, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

1952ஆம் ஆண்டு ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் காஷ்மீர் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றதற்காக மகன்லால் சர்கார் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகசுவேந்து அதிகாரி பதவியேற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam