Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைப்பதைச் சுற்றிய அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களின் ஆணைப்படி ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஜனநாயக முடிவை ஆதரித்து மதிக்கும் தலைவர்கள் மக்களின் மதிப்பைப் பெறுவார்கள். மாறாக, பிரச்சனைகளையோ அல்லது பிரிவினைகளையோ உருவாக்க முயற்சிப்பவர்கள் பொதுமக்களின் ஏமாற்றத்திற்கு மட்டுமே ஆளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,இறுதியில் அனைத்துத் தலைவர்களும் புதிய அரசு அமைவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மக்களின் ஆணை எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் அதற்கு ஆதரவும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ