Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 09 மே (ஹி.ச.)
தென்மேற்கு மத்திய வங்கக் கடல் முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
சாலையில் தேங்கியுள்ள நீரில் வாகனங்கள் செல்லும் காட்சி, குளத்தில் செல்லும் நிலையைப் போல் காணப்படுகிறது.
அதேபோல், மார்க்கெட் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள காய்கறி கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மழைநீரில் மிதந்தன.
இதனால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam