மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
கொல்கத்தா, 09 மே (ஹி.ச.) மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 294 இடங்களில் 207 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, முதல்முறையாக மேற்கு வங்கத்தில் ப
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு


கொல்கத்தா, 09 மே (ஹி.ச.)

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 294 இடங்களில் 207 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, முதல்முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைகிறது.

நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை பவானிபூரில் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

அவரே மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் மோடி மேடையில் இருந்த 98 வயதான மூத்த பாஜக தொண்டர் மகான்லால் சர்க்காரிடம் ஆசி பெற்றார்.

Hindusthan Samachar / vidya.b