Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மே (ஹி.ச.)
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, ஆளுநர் குறித்து விஜய் ஏன் பேச மறுக்கிறார் என திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த பதிவிற்கு தற்போது தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஏன் தமிழக வெற்றிக் கழகம் ஆளுநரையோ, பாரதிய ஜனதா கட்சியையோ குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றால், ஆளுநரின் அணுகுமுறை சரியானது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதால்தான். ஆளுநர் நேரடியாகவே தங்களது நிலைப்பாட்டை அவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.
தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மட்டுமே முன்னிறுத்தியதால்தான் திமுகவை மக்கள் புறந்தள்ளியுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்ல அனுமதியுங்கள்.
ஆளுநரின் சொல்லில் உண்மை இருக்கிறது; உங்கள் சொல்லில் உண்மை இல்லை என்பதையும் அரசியல் கட்சிகளும் மக்களும் உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ